×

பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: அனைத்து இடஒதுக்கீட்டுக்கான தேசிய பெண்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

 

சென்னை: இடஒதுக்கீட்டுக்கான தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் ராதிகா, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில தலைவர் மஞ்சுளா ஆகியோர் கூட்டாக சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சங்க பொதுச் செயலாளர் ராதிகா கூறியதாவது:

வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை எந்தவித நிபந்தனையும் இன்றி அமல்படுத்த வேண்டும். நாளை (22ம் தேதி) ஆளுநர் மாளிகை முன்பு அனைத்து இட ஒதுக்கீட்டுக்கான பெண்கள் கூட்டமைப்பு சார்பாக மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பும் தொகுதி மறுவரை போன்ற மசோதாக்கள் கூட்டத்தொடரில் வருகின்றது என்பதை காரணம் காட்டி மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை காலம் தாழ்த்தக் கூடாது என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறும். இதன் ஒரு பகுதியாக மதசார்பற்ற கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து, இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்ய குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளோம்.

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, தேமுதிக தலைவரை நேரில் சந்தித்து நாங்கள் ஆதரவு கேட்டுள்ளோம். தொடர்ச்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவை கேட்க இருக்கின்றோம். மகாராஷ்டிரா, உத்தரபிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது, அந்த தேர்தலில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும் என முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம். பெண்களை இரண்டாம் தர பார்வையாக பார்ப்பது தான் பிஜேபியின் சித்தாந்தம். பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து விட்டோம் என்று சொல்கின்ற பாஜ ஏன் அதை அமல்படுத்த முயற்சி எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில தலைவர் மஞ்சுளா கூறுகையில், ‘‘33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து விட்டதாக பாஜ அரசு கூறுகின்றது. ஆனால் இதுவரை நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் அது அமல்படுத்தப்படவில்லை. ஆகவே பாஜ பெண்களையும் ஏமாற்றும் மோசடி சட்டமாகவே இதை கொண்டு வந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின்பும் தொகுதி வரையறைக்கு பின்புதான் இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்பது மோசடி செய்யும் பாஜ அரசின் செயல். அடுத்த தேர்தல்களிலேயே பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்த இருக்கின்றோம்’’ என்றார்.

 

Tags : Governor's ,National Women's Alliance for All Reservations ,Chennai ,National Women's Alliance for Reservations ,Tamil Nadu All Women's Alliance ,All India Democratic Women's Association ,General Secretary ,Radhika ,State President ,National Federation of Indian Women Manjula ,Chepauk Press Club… ,
× RELATED 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி...