கரூர் ராயனூர் தாந்தோணி இடையே சாலையில் தெரு விளக்கு அமைத்து தர வேண்டும்

கரூர், மார்ச் 15: கரூர் ராயனூர் தாந்தோணிமலை குறிஞ்சி நகர் இடையே தெரு விளக்கு வசதி அமைத்து தர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் நான்கு ரோடு பகுதியில் இருந்து குறிஞ்சி நகர் வழியாக தாந்தோணிமலை செல்லும் பிரதான சாலை உள்ளது. சாலையின் இருபுறமும் குடியிருப்புகளும், நிறுவனங்களும் உள்ளன. இரண்டு புறத்தில் இருந்தும் வாகன போக்குவரத்து அதிகளவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சாலையின் குறிப்பிட்ட தூரம் வரை போதிய தெருவிளக்கு வசதி குறைவு காரணமாக இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

அதிகளவு குடியிருப்புகள் உள்ள பகுதி என்பதால், இந்த சாலையில் கூடுதலாக தெரு விளக்கு வசதி அமைத்து தர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ராயனூர் தாந்தோணிமலை சாலை இடையே கூடுதலாக தெரு விளக்கு அமைத்து தர தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: