×

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; தமிழ் சினிமாவுக்கு 10 விருதுகள்: சிறந்த தமிழ்ப் படம் – சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘ராயன்’

புதுடெல்லி: 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் சினிமாவுக்கு 10 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகராக மம்மூட்டி, கார்த்திக் ஆர்யன், தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது, சிறந்த நடிகையாக யாமி கவுதம், சிறந்த தமிழ்ப் படம் சன் பிக்சர்ஸ் தயாரித்த ராயன், சிறந்த இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், சிறந்த இயக்குநராக ராஜ்குமார் பெரியசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 71 ஆண்டுகளாக தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 72வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று மாலை 5.30 மணியளவில் அறிவிக்கப்பட்டது. கடந்த 2024ல் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கான விருதுகள் டெல்லியிலுள்ள தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. நான்-பியூச்சர் பிலிம் பிரிவில் ஆவணப்படங்கள், குறும்படங்கள், அனிமேஷன் ஆகிய பிரிவுக்கு இயக்குனர் இ.வி.கணேஷ் பாபு, தமிழ்நாட்டில் இருந்து சென்று ஜூரியாக செயல்பட்டார். மேலும், முழுநீள திரைப்படங்களுக்கான பிரிவில் கலா மாஸ்டர் தமிழகத்தில் இருந்து சென்று பங்கேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மொழிகளை சேர்ந்த 400 படங்கள் பார்வையிடப்பட்டு, அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்குழு தலைவராக ஜெயராஜ் செயல்பட்டார்.

தமிழ் திரையுலகிற்கு 10 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. ‘அமரன்’ படத்துக்கு 3 விருதுகள், ‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு 2 விருதுகள், ‘மகாராஜா’ படத்துக்கு 2 விருதுகள் மற்றும் ‘ராயன்’, ‘மெய்யழகன்’, ‘ப்ளூ’ (ஆவணப்படம்) ஆகிய படங்களுக்கு தலா 1 விருது என்று, மொத்தம் 10 விருதுகள் கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க, தனுஷ் எழுதி இயக்கி நடித்த ‘ராயன்’ என்ற படம், சிறந்த தமிழ் படத்துக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சிறந்த தேசிய நலன், சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த திரைப்படம் என்று தேர்வு செய்யப்பட்ட ‘கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்துக்கும் மற்றும் இதில் ஹீரோவாக நடித்திருந்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதும் கிடைத்துள்ளது. ஏற்கனவே ‘ஆடுகளம்’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் நடிப்புக்காகவும் மற்றும் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ ஆகிய படங்களுக்கு தயாரிப்பாளருக்காகவும் தனுஷ் தேசிய விருது பெற்றுள்ளார்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது 2 நடிகர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு இருக்கிறது. மலையாளத்தில் வெளியான ‘பிரம்மயுகம்’ என்ற படத்தில் நடித்த மம்மூட்டிக்கும், ‘சந்து சாம்பியன்’ என்ற இந்தி படத்தில் நடித்த கார்த்திக் ஆர்யனுக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது மம்மூட்டி பெறும் 4வது தேசிய விருதாகும். சிறந்த நடிகைக்கான விருது, இந்தியில் வெளியான ‘ஆர்ட்டிகிள் 370’ என்ற படத்தில் நடித்த யாமி கவுதமுக்கு கிடைத்துள்ளது.

இதர விருதுகள் விவரம் வருமாறு:
சிறந்த படம்: ‘ஆர்ட்டிகிள் 370’. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்: ‘கல்கி 2898 ஏ.டி’. சிறந்த இயக்குனர்: ராஜ்குமார் பெரியசாமி (அமரன்). சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படம்: ‘சின்ன கத காது’ (தெலுங்கு). சிறந்த துணை நடிகை: சாச்சனா நமிதாஸ் (மகாராஜா). சிறந்த துணை நடிகர்: சஞ்சய் மிஸ்ரா (பக்‌ஷக்). சிறந்த குழந்தை நட்சத்திரங்கள்: ரித்திமான் பானர்ஜி, அருண்தேவ் பொதுவரா, அதிஷ் ஷெட்டி. சிறந்த வசனகர்த்தா: வெங்கி அட்லூரி (லக்கி பாஸ்கர்). சிறந்த கன்னட திரைப்படம்: மித்யா. சிறந்த மலையாள திரைப்படம்: ஃபெமினிச்சி ஃபாத்திமா. சிறந்த தெலுங்கு படம்: கமிட்டி குர்ரோலு. சிறந்த இந்தி திரைப்படம்: காந்த். சிறந்த குஜராத்தி திரைப்படம்: மாறன். சிறந்த மராத்தி திரைப்படம்: முக்கம் போஸ்ட் பொம்பில்வாடி. சிறந்த பெங்காலி திரைப்படம்: சாலசித்ரா ஏகோன். சிறந்த துளு திரைப்படம்: இம்பு. சிறந்த ஒடியா திரைப்படம்: லஹரி. சிறந்த அசாமிய திரைப்படம்: ஜூய்பூல்.

ஸ்பெஷல் ஜூரி விருது: கார்த்தி நடித்த ‘மெய்யழகன்’ என்ற படத்துக்காக டி.எஸ்.ஹரிஹர சுதன் (சிறந்த ஒலிக்கலவை).
சிறந்த இசை அமைப்பாளர் (பாடல்): சாஸ்வத் சச்தேவ் (ஆர்ட்டிகிள் 370). சிறந்த இசை அமைப்பாளர் (பின்னணி இசை): ஜி.வி.பிரகாஷ் குமார் (அமரன்). ஏற்கனவே ‘சூரரைப்போற்று’, ‘வாத்தி’ ஆகிய திரைப்படங்களுக்காக ஜி.வி.பிரகாஷ் குமார் அடுத்தடுத்து 2 தேசிய விருதுகள் பெற்றிருந்தார். சிறந்த பின்னணி பாடகர்: அபய் ஜோத்புர்கர். சிறந்த பாடகி: வைக்கம் விஜயலட்சுமி (‘ஏஆர்எம்’ என்ற மலையாள படம்). சிறந்த ஒளிப்பதிவு: ஷெஹ்னாத் ஜலால் (‘பிரம்மயுகம்’ என்ற மலையாள படம்). சிறந்த படத்தொகுப்பு:

ஆர்.கலைவாணன் (அமரன்). சிறந்த ஒலியமைப்பு: மனஸ் சவுத்ரி (பூஃல் புல்லையா 3).
சிறந்த பாடலாசிரியர்: மனோஜ் முன்தாஷிர் (‘மைதான்’ என்ற இந்தி படம்). சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: கல்கி 2898 ஏ.டி.

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்: தீபாலி நூர், ஷீத்தல் சர்மா (புஷ்பா 2). சிறந்த ஒப்பனைக்கலைஞர்: பி.ரவிகுமார் (கமிட்டி குர்ரோலு) சிறந்த திரைக்கதை: புஷ்பா 2. சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ்: கல்கி 2898 ஏ.டி. சிறந்த நடன இயக்குனர்: விஜய் கங்குலி (‘ஸ்திரீ 2’ என்ற இந்தி படம்). சிறந்த ஸ்டண்ட் இயக்குனர்: அனல் அரசு (மகாராஜா).

சிறந்த ஆவணப்படம்: பங்கர் (பெங்காலி). சிறந்த அறிமுக இயக்குனர்: ரவி ராஜ் முர்மு. சிறந்த வாழ்க்கை வரலாறு /வரலாற்று புனரமைப்பு / தொகுப்பு திரைப்படம்: ககோரி (கமலேஷ் கே மிஸ்ரா). சிறந்த கலை / கலாச்சார திரைப்படம்: ‘மெய்ன் நிதா’ என்ற இந்தி படத்துக்காக அதுல் பாண்டே. சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்: பிப்லான்ட்ரி: எ டேல் ஆப் இகோ பெமினிசம் – சூரஜ் குமார். சிறந்த அனிமேஷன் படம்: டச்டு ஆஸ் வாட்டர் – ஜோஷி பெனடிக்ட். சிறந்த குறும்படம்: ஹம்சஃபர் (மராத்தி). சிறந்த இயக்கம்: ‘ஸ்டாச்சு ஆப் யுனிட்டி: ஏக்தா கா பிரதீக்’ என்ற இந்தி படம் – ஆனந்த் எல்.ராய். சிறந்த திரைப்பட விமர்சகர்: இந்தி சினிமா விமர்சனத்துக்காக சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா. சினிமா பற்றிய சிறந்த புத்தகங்கள்: ‘நானிருவதே நிமகாகி நதிருவுடே நானகாகி’: கெஞ்சனுரு. பிரதீப் குமார் ஷெட்டியின் ‘கன்னட சினிமாடா தத்வ மட்டு ராஜகீயா’.

Tags : National Film Awards ,Sun Pictures ,New Delhi ,72nd National Film Awards ,Mammootty ,Karthik Aryan ,Dhanush ,Yami Gautam ,Sun… ,
× RELATED CBSE 2026-ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு...