×

இந்திய விண்வெளித்துறையில் புதிய மைல்கல்: விக்ரம்-1 ராக்கெட் வெற்றியை பாராட்டிய பிரதமர்…

டெல்லி: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம்-1’ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார். ஸ்கைரூட் நிறுவனத்தின் நிறுவனர்களான பவன் சந்தனா மற்றும் பாரத் தாகா ஆகியோரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, பொறுப்புகளை வழங்கினால் இந்தியாவின் இளைஞர்கள் எதையும் சாதிப்பார்கள் என்பதை இக்குழுவினர் நிரூபித்துள்ளதாகப் பாராட்டினார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை இந்தியாவின் விண்வெளித் துறையில் சுயசார்பை காட்டுவதாகவும், நாட்டின் இளைஞர்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்றும் அவர் பாராட்டு தெரிவித்து உள்ளார். விக்ரம்-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது குறித்து தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இன்றைய நாள் இந்திய விண்வெளிப் பயணத்தில் ஒரு திருப்புமுனையான தருணம். நமது தனியார் துறையின் அதிகரித்து வரும் பங்களிப்பு, புதிய எல்லைகளைத் திறந்து, புத்தாக்கத்தை துரிதப்படுத்துகிறது. மேலும் இன்று படைக்கப்பட்டுள்ள இந்த புதிய சாதனை, எண்ணற்ற இளைஞர்களை பெரிய கனவுகளைக் காணவும், அச்சமின்றிப் புதுமைகளைப் படைக்கவும் ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

Tags : PM ,Delhi ,Modi ,ISRO ,Skyroot Aerospace ,India ,Narendra Modi ,
× RELATED தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு;...