×

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே பட்டாசு தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து: 8 பேர் உயிரிழப்பு

 

குஜராத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே பட்டாசு தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்த்தில் 8 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். RAF வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள ராமோல்-கத்ராட் (Ramol-Gatrad) சாலையில் அமைந்துள்ள பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆலை வெடித்துச் சிதறியதன் தாக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது, இதன் சத்தம் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை கேட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

விபத்து நடந்த இடம் ராபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் (RAF) முகாமிற்கு அருகில் இருந்ததால், RAF வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.சிக்குண்ட தொழிலாளர்களை மீட்டதோடு, பல தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன

முதற்கட்ட விசாரணையில், இந்த பட்டாசு ஆலையை மெஹுல் தோடியா (Mehul Dodiya) என்பவர் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஆலையின் உரிமம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையிலும், விதிகளை மீறி இந்த ஆலை சட்டவிரோதமாக தொடர்ந்து இயங்கி வந்ததே இந்த பெரும் அசம்பாவிதத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.இது தொடர்பாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Tags : Ahmedabad, Gujarat ,Gujarat ,RAF ,
× RELATED தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு;...