×

ம.பியில் 4 பி.எட் கல்லூரிகளில் முறைகேடு: ஒன்றிய கல்வி அமைச்சகம் விசாரணை

போபால்: மத்தியப் பிரதேசத்தில் உள்ள நான்கு பி.எட். கல்லூரிகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, அவற்றை ஆய்வு செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களில் இயங்காதது மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது உள்ளிட்ட புகார்களுக்கு உள்ளான மத்தியப் பிரதேசத்தின் நான்கு பி.எட். கல்லூரிகளை விசாரிக்க, ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் தேசிய ஆசிரியர் கல்விக் குழு 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் மற்றும் சரிபார்ப்புக் குழுவை அமைத்துள்ளது.

ஆசிரியர் கல்வியை ஒழுங்குபடுத்தும் பொறுப்பைக் கொண்ட இந்தச் சட்டப்பூர்வ அமைப்பு, ஜூலை 15 அன்று பிறப்பித்த உத்தரவில், ஐந்து வேலை நாட்களுக்குள் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அக்குழுவிற்கு அறிவுறுத்தியது.

Tags : Union Education Ministry ,Bhopal ,Madhya Pradesh ,Union government ,
× RELATED CBSE 2026-ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு...