×

எஸ்ஐஆர் விவகாரத்தில் தனி நபர்கள் பாதிக்கப்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம்: திமுக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியில் தீவிர சிறப்பு திருத்த பணி நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு, திமுக, கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பட்டியலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தன.

இந்நிலையில் எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் திமுகவின் ஆர்.எஸ்.சிவா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்‌ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் தரப்பில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ”தமிழகத்தில் வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் பணிகள் முடிவடைந்துள்ளதால், இந்த வழக்கில் தற்போது மேற்கொண்டு எந்தவித விசாரணை நடவடிக்கையும் தேவையில்லை. எனவே வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று தெரிவித்த நீதிபதிகள்,” இருப்பினும் எஸ் ஐ ஆர் விவகாரத்தில் தனிப்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்தனர்.

Tags : SIR ,Supreme Court ,DMK ,New Delhi ,Tamil Nadu ,Kerala ,Tamil ,Nadu ,Tamil Nadu government ,Communist ,
× RELATED நவோதயா வித்யாலயா பள்ளி குறித்த வழக்கு...