×

கார்களுக்கு கடுமையான எரிபொருள் திறன் விதிகள்: ஒன்றிய அரசு வெளியீடு

புதுடெல்லி: கார்ப்பரேட் சராசரி எரிபொருள் திறன் என்பது ஒரு நிறுவனம் விற்கும் அனைத்து வாகனங்களின் சராசரி எரிபொருள் நுகர்வை குறைக்கும் அரசாங்க விதிமுறையாகும். இது மாசைக் குறைப்பதையும், எரிபொருள் திறனை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள சிஏஎப்இ-2 விதிகள் 2027 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், புதிய சிஏஎப்இ-3 விதிகள் 2027 ஏப்ரல் 1 முதல் 2032 மார்ச் 31 வரை 5 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும்.

சிஏஎப்இ-3க்கான வரைவு விதிகளை ஒன்றிய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 2027-28 முதல் 2031-32 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் வாகனங்கள் இவ்விதிகளின் கீழ் வரும்.

இந்த வரைவு விதியின்படி, வாகனங்களின் சராசரி எரிபொருள் நுகர்வு இலக்கு ஆண்டுதோறும் கடுமையாக்கப்படுகிறது. 2027-28-ல் 100 கி.மீ.க்கு 3.996 லிட்டராக இருக்கும் இலக்கு, 2031-32-க்குள் 3.3273 லிட்டராக குறைக்கப்படுகிறது. இதேபோல், கார்பன் டைஆக்சைடு உமிழ்வு அளவும் கி.மீ.க்கு 94.76 கிராமில் இருந்து 78.90 கிராமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags : Union government ,New Delhi ,
× RELATED நவோதயா வித்யாலயா பள்ளி குறித்த வழக்கு...