×

டாக்டரை கொன்ற மனைவி கைது: 8 வயது மகனுக்கும் கத்திக்குத்து

பெங்களூரு: கர்நாடகாவில் டாக்டரை கொன்ற மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் சங்கேஷ்வர் தாலுகாவில் உள்ள ஹெப்பால் கிராமத்தைச் சேர்ந்த மயக்கவியல் மருத்துவர் கிரண் ஹொன்னண்ணவர். இவரும் விஜயபுராவைச் சேர்ந்த பிரியங்கா என்ற இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர்கள் இருவரும் ஒரு திருமணச் செயலி மூலம் சந்தித்து திருமணம் செய்துகொண்டனர்.

பிரியங்கா வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். கிரண் சாதாரண பின்னணி கொண்டவர். பிரியங்காவும் மருத்துவர் தான். ஆனால் தற்போதைக்கு பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துவந்தார். கிரண் ஹொன்னண்ணவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். கிரண்-பிரியங்கா தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கிரண் உறவினர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்க்கையில் கிரண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

அவரது மகன் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடினார். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். கத்தியால் கழுத்து உள்ளிட்ட இடங்களில் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கிரணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags :
× RELATED நவோதயா வித்யாலயா பள்ளி குறித்த வழக்கு...