×

பக்கத்து வீட்டில் கேமரா பொருத்தி சென்னையில் இருந்து இளம்பெண் அறைகளை கண்காணிக்கும் ஆசாமி: வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார்

 

வேலூர், ஜூலை 16: பக்கத்து வீட்டில் கேமரா பொருத்தி சென்னையில் இருந்து இளம்பெண்ணின் அறைகளை கண்காணிப்பதாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் எஸ்பி சிவராமன் மனுக்களை பெற்றார். இதில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். எனது பக்கத்து வீட்டுக்காரர் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் தற்போது எனது வீட்டின் அருகே உள்ள அவரது வீட்டில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி இருக்கிறார். ஆனால் அந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் எனது வீட்டில் நடக்கும் அனைத்தையும் நேரலையாக பார்க்கிறார்.

என்னால் சுதந்திரமாக நடமாட கூட முடியவில்லை. உளவு பார்ப்பது போல் அமைத்துள்ளார். எனது வீட்டில் உள்ள அனைத்து அறைகளையும் கண்காணிக்கும் வகையில் உள்ளது. எனவே நேரில் வந்து ஆய்வு செய்து கண்காணிப்பு கேமராக்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

Tags : Chennai ,Vellore SP ,Vellore ,SP ,Sivaraman ,
× RELATED 236 வெற்றி பள்ளிகளில் மாணவர்களுக்கு...