- மின்சார வாரியம்
- மேட்டூர்
- பெண்கள் மேல்நிலைப் பள்ளி
- மெட்டூர், சேலம் மாவட்டம்
- சப்-இன்ஸ்பெக்டர்
- ஈஸ்வரன்
- கிழக்கு-மேற்கு கால்வாய்…
மேட்டூர், ஜூலை 15: சேலம் மாவட்டம் மேட்டூரில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார், அப்பள்ளியில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாய் செல்லும் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மின்வாரியத்தில் ஒயர்மேனாக பணிபுரியும் ஜோசப் (47), மாதா கோவில் அருகே ஹோட்டலில் சரக்கு மாஸ்டராக வேலை செய்யும் கண்ணன் (40) ஆகியோர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
போலீசார் அவர்களை விரட்டி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட இருவரும் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
