×

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

சேலம், ஜூலை 14: சேலம் காரிப்பட்டி அருகேயுள்ள முட்டைகடை பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் முரளி (39). இவர் கொலை முயற்சி வழக்கில் காரிப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த முரளி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை கைது செய்ய நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து அவரை காரிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

 

Tags : Salem ,Murali ,Muttikadai ,Karipatti ,Karipatti police ,
× RELATED வாரந்தோறும் ஜல்லிக்கட்டு நடத்தி வந்தது அம்பலம்