இ 20 பெட்ரோலால் 5% மைலேஜ் குறையலாம்: பெட்ரோலிய அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: கடந்த ஏப்ரல் முதல் நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் பெட்ரோலில் 20% எத்தனால் (இ20) கலப்பு தரநிலையாக மாற்றப்பட்டுள்ளது. எத்தனால் கலப்பு பெட்ரோல் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட கேள்வி-பதில் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளதாவது:  இ20என்பது இ 10 அல்லது தூய பெட்ரோலை விட தூய்மையான அதிக செயல் திறன் கொண்ட எரிபொருள் ஆகும். பல ஆண்டு கால அறிவியல் சோதனைகள், வாகன உற்பத்தியாளர்களுடனான ஆலோசனைகள்,உள்நாட்டு எத்தனால் உற்பத்தி விரிவாக்கத்திற்கு பிறகே இது அறிமுகப்படுத்தப்பட்டது.

2030-ம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்க அரசு முதலில் திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்த இலக்கு 2025-ம் ஆண்டிலேயே முன்கூட்டியே எட்டப்பட்டுள்ளது. 20% எத்தனால் கலந்த பெட்ரோல், மைலேஜை 3% முதல் 5% குறைக்கக்கூடும்.இருப்பினும், இந்தச் சிறிய குறைப்பு, மேம்பட்ட செயல்திறன் நன்மைகள் மற்றும் வலுவான தேசிய எரிசக்திப் பாதுகாப்பு ஆகியவற்றால் பெருமளவில் ஈடுசெய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.

மேலும் இ20 இன்ஜின் செயல்பாட்டைத் தூய்மையாக்குவதோடு, அதன் வாழ்நாள் முழுவதற்குமான கார்பன் வெளியேற்றத்தையும் கணிசமாக குறைக்கிறது. இது ரூ.1.97 லட்சம் கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணியைச் சேமித்துள்ளதுடன், ஏறக்குறைய 316 லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதியையும் குறைத்துள்ளது என தெரிவித்துள்ளது.

Related Stories: