மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஓசூர், மார்ச் 13:ஓசூரில் பிரசித்திபெற்ற சந்திரசூடேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டு வரும் 28ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று முன்தினம் மலைகோயிலில் சாமிக்கு பால், இளநீர், பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை வரை சுவாமிக்கு 4 கால பூஜை நடந்தது.

நேற்று மாலை முதல் இன்று (13ம் தேதி)காலை வரை ராம்நகர் சோமேஸ்வரர், கல்யாண சந்திரசூடேஸ்வரர், நாகேஸ்வரர் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் பஜனை, கலைநிகழ்ச்சி, சங்காபிஷேகம் நடந்தது. இதேபோல், போச்சம்பள்ளி ஜோதிலிங்கேஸ்வரர் கோயிலில், சுவாமிக்கு இளநீர், சந்தனம், தயிர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வேத பாராயணம் நடந்தது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: