×

நீலகிரி காபிக்கு புவிசார் குறியீடு வழங்க கோரிக்கை

 

கூடலூர், ஜூலை 10: நீலகிரியில் உற்பத்தியாகும் தனிச்சுவையான காபிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், என காபி வாரிய இணை இயக்குனருக்கு பெஸ்டா அமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கல்பெட்டாவில் உள்ள காபி ஆராய்ச்சி மைய அலுவலகத்தில் காபி வாரிய இணை இயக்குநர் கருத்தமணியுடன் நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் கூட்டமைப்பின் (பெஸ்ட்டா) தலைவர் சலிவயல் ஷாஜி, பொது செயலாளர் விஸ்வநாதன், செயலாளர் ஆனந்தராஜா ஆகியோர் சந்தித்து, கூடலூர் பகுதியில் உள்ள ஜென்ம நிலங்களில் காபி விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கி வரும் மானிய உதவிகள் கிடைக்காதது குறித்தும், அவற்றை பெறுவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

Tags : Nilgiri ,Gudalur ,Coffee Board ,BESTA ,Coffee Research Institute ,Kalpetta, Kerala… ,
× RELATED பரம்பிக்குளம் வனப்பகுதியில்...