×

திட்ட பணிகள் ஆய்வு கூட்டம்

 

ஊட்டி, ஜூலை 9: நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும், வனத்துறை, வருவாய்த்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், சுகாதாரத்துறை, சுற்றுலாத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

Tags : Ooty ,Nilgiris district ,Lakshmi Bhavya Taninyu ,
× RELATED பரம்பிக்குளம் வனப்பகுதியில்...