- உச்ச நீதிமன்றம்
- அஇஅதிமுக
- உயர் நீதிமன்ற மத்தியஸ்தம் மற்றும் நிவாரண மையம்
- புது தில்லி
- பொது
- இந்திய தேர்தல் ஆணையம்
- தில்லி உயர் நீதிமன்றம்
- ராம்குமார் ஆதித்தன்
- சுரேன் பழனிசாமி
- தலைமை தேர்தல் ஆணையம்…
புதுடெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை தொடர்பான வழக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதுபோன்ற நிலையில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய அதிமுக விதிகளில் அதிமுக பொதுக்குழு தேதி 12/09/2017, செயற்குழு 01/12/2021 மற்றும் பொதுக்குழு 11/07/2022ல் நடந்ததில் அதிமுக விதிகளுக்கு முரணாக திருத்தங்கள் செய்ததை எதிர்த்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும் இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதி வழங்கிய உத்தரவை ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது,” இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற சமரச தீர்வு மையத்தில் இருதரப்பும் சமரசமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
