மதுரை-விழுப்புரம் சிறப்பு ரயில் முன்பதிவில்லாத ரயிலாக மாற்றம்

மதுரை, மார்ச் 12: மதுரை-விழுப்புரம் சிறப்பு ரயில் முன்பதிவில்லாத ரயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி: வண்டி எண் 06867/06868 மதுரை-விழுப்புரம்-மதுரை விரைவு சிறப்பு ரயிலில் தற்போது பயணச்சீட்டு முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்த ரயில்கள் மார்ச் 17ம் தேதி முதல் முழுவதும் முன்பதிவு செய்யப்படாத ரயிலாக மாற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் பயணிகள் இந்த ரயில்களில் பயணத்திற்கு சற்று நேரத்திற்கு முன்பாக முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு பெற்று பயணம் செய்யலாம் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories: