×

வேலூரில் முதல் திருட்டின்போது நடவடிக்கை இல்லாததால் 2வது முறையாக கோயில் உண்டியல் உடைத்து திருட்டு: குற்றவாளிகளை தேடும் போலீசார்

 

 

வேலூர், ஜூலை 6: வேலூரில் முதல் திருட்டின்போது நடவடிக்ைக இல்லாததால், 2வது முறையாக கோயில் உண்டியல் உடைத்து திருட்டு நடந்துள்ளது. குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் பேலஸ்கபே அருகே சக்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல், பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது, கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கோயில் நிர்வாகிக்கும், வேலூர் வடக்கு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த மாதம் இக்கோயிலின் உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.

முதல் திருட்டின்போதே நடவடிக்கை இல்லாததால், 2வது முறையாக நேற்று மீண்டும் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருடிய ஆசாமிகளை பிடித்திருந்தால் மீண்டும் திருட்டு நடந்திருக்காது. முதல் திருட்டில் நடவடிக்கை இல்லாததால், மீண்டும் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று ெதரிகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். திருட்டு நடந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்துக்குள் தான் வடக்கு காவல்நிலையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Vellore ,Shakti Vinayagar ,Vellore Palascabe ,
× RELATED ரூ.7.2 கோடியில் வள்ளிமலை கோயில், சமணர்...