×

வேலூர் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: எஸ்பி அலுவலகத்தில் புகார்

 

வேலூர், ஜூலை 3: வேலூர் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு 2 மாற்றுதிறனாளி மகள்கள் உள்ளனர். கடந்த 23ம் தேதி அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மதுபோதையில் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஆட்கள் யாரும் இல்லாததால் என் மாற்றுத்திறனாளி பெண்ணின் ஆடைகளை கலைத்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனைக் கண்ட நான் கூச்சலிட்டேன். எனது சத்தத்தை கேட்ட எனது சகோதரர்கள் இருவரும் வீட்டிற்கு ஓடி வந்தனர். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து எனது 2 சகோதரர்களின் தலையில் வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த இருவரும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எதிர் தரப்பினர் அரியூர் போலீசில் எங்கள் மீது பொய்யான புகார் கொடுத்து உள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு அழைத்து வருகின்றனர். ஏழ்மை நிலையில் உள்ள எங்களால் வழக்கை எதிர்கொள்ள முடியாது. எனவே எங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். உண்மையான குற்றவாளியான அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.

Tags : Vellore ,SP ,
× RELATED ரூ.7.2 கோடியில் வள்ளிமலை கோயில், சமணர்...