பழநி, ஜூலை 6: பழநி அருகே சத்திரப்பட்டி ரயில் நிறுத்தம் அருகில் நேற்று முன்தினம் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். உயிரிழந்தவர் பிரவுன் நிற டீசர்ட், காவி வேட்டி, பிரவுன் நிற டவுசர் அணிந்துள்ளார். வலது கையில் ‘எஸ்’ என்று பச்சை குத்தி உள்ளார். உயிரிழந்த நபரின் உடலைக் கைபற்றிய ரயில்வே போலீசார், பிரேத பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த நபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
