கரூர், ஜூலை 8: பலத்த காற்றின் காரணமாக சாலைகளில் மண் பரவி கண்களை பதம் பார்ப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகினற்னர். ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இரண்டு மாதங்கள் (ஆனி, ஆடி) கரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசுவது வழக்கம். எப்போதும், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியதும் காற்று வீசுவதும் அதிகரிக்கும். அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களாக பகல் நேரங்களில் அனைத்து பகுதிகளிலும் சுட்டெரிக்கும் சூறாவளி காற்று வீசி வருகிறது.் காற்றின் காரணமாக மண்களும் பரவி வாகன ஓட்டிகளை பதம் பார்த்து வருகிறது.
இதன் காரணமாக இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களு பல்வேறு சிரமத்துக்க ஆளாகி வருகின்றனர். தற்போதைய நிலையில் அதிகளவு காற்றின் காரணமாக சாலைகளில் நடந்து செல்லக்கூட முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
