×

பைபாஸ் சாலையில் போலீசார் ஆய்வு

 

வேலாயுதம்பாளையம், ஜூலை 2: வேலாயுதம்பாளையம் பைபாஸ் சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு செய்தார். கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் முதல் மண்மங்கலம் வரை சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலை, அதேபோல் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூலிமங்கலம் பிரிவு , நானப்பரப்பு பிரிவு , அய்யம்பாளையம் பிரிவு ,ஆத்தூர் பிரிவு ,தளவா பாளையம் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் அல்லது, தானியங்கி செயல்படும் சிக்னல் அமைக்கவும் தொடர்ந்து பல ஆண்டுகளாக வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மண்மங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகவேல் அடிக்கடி வாகன விபத்து ஏற்படும் பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் விபத்துகளை தவிர்ப்பதில் குறித்து அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் பொதுமக்கள் விழிப்போடு பைபாஸ் சாலையை கடக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Tags : Velayudhampalayam ,Salem-Karur National Highway ,Thauttupalayam ,Manmangalam ,Karur district ,Moolimangalam ,Karur-Salem National Highway ,
× RELATED கரூர் மூலக்காட்டனூர் பிரிவில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்