×

கரூர் வெங்கமேடு இணைப்பு சாலையில் மின்வசதி இல்லாததால் விபத்து அதிகரிப்பு

 

கரூர், ஜூலை 6: கரூர் வெங்கமேடு வாங்கல சாலை இணைப்பு சாலையின் மின்விளக்கு வசதி அமைத்து தர வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளளர். கரூர் வெங்கமேடு பகுதியில் இருந்து அரசு காலனி மற்றும் வாங்கல் சாலைக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும் வாங்கப்பாளையம் வழியாகவோ அல்லது கரூர் சர்ச் கார்னர் வழியாகவோ சென்று வந்தனர். இந்நிலையில் இரண்டு பகுதிகளை சேர்ந்த அனைத்து தரப்பினர்களும் எனிதாக வெங்கமேடு மற்றும் வாங்கல் சாலை பகுதிக்கு எளிதாக செலலும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டுப்பகுதியை சீரமைத்து புதிதாக தார்ச்சாலை அமைத்து தரப்பட்டுள்ளது. தற்போது இந்த சாலையின் வழியாக தினமும் நுற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சாலையின் இருபுறமும் அதிகளவு காட்டுப்பகுதியாக உள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் நடந்து செல்பவர்களும் கும்மிருட்டு காரணமாக பீதியில் கடந்து செல்கின்றனர். எனவே, இவர்களை போன்றவர்களின் நலன் கருதி இந்த சாலையில் மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இநத பகுதிச் சாலையை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Karur Vengamedu link road ,Karur ,Karur Vengamedu Vanga Road ,Karur Vengamedu ,Government Colony ,Vanga Road… ,
× RELATED கரூர் மூலக்காட்டனூர் பிரிவில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்