×

கரூர் தாந்தோணிமலையில் சேதமாகி இடிந்துவிழும் நிலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்

 

கரூர், ஜூலை 2: கரூர் தாந்தோணிமலை பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் எப்போது சீரமைத்து தரப்படும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த வளாக குடியிருப்பில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பழமை வாய்ந்த குடியிருப்பு வளாகமாக இந்த வீட்டு வசதி வாரிய வளாகம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி முதல் அனைத்தும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும், குடியிருப்பு வளாகத்தில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதால், ஒரு சில அடுக்குமாடி கட்டிடத்தில் தான் பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். அதுவும் மோசமான நிலையில் உள்ளது.

குடியிருப்பின் கீழ் பகுதி எப்போதும் திறந்த நிலையில் உள்ளதால் சுற்றித்திரியும் தெரு நாய்கள் உள்ளே புகுந்து மேல் மாடி வரை செல்வதால் சிரமாக உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அனைவரும் பாதுகாப்பற்ற சூழலில் தான் வசித்து வருகின்றனர். மேலும், இங்கு வசித்து வரும் குழந்தைகளுக்கான பூங்கா் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தை புதுப்பித்து அனைவ ரும் ப யமின்றி வசிக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வே ண்டும் என பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த வீட்டு வசதி வாரிய வளாகத்தை பார்வையிட்டு முறையாக பராமரித்து தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதற்கான ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என குடியிருப்பு வாசிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Housing Board ,Karur Thanthonimalai ,Karur ,Thanthonimalai ,Karur Municipal Corporation ,
× RELATED கரூர் கையேந்தி பவன்களில் பிஸாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு