- குமாரி மாவட்டம்
- டி.எம்.கே எம்.எல்.ஏ ஆஸ்டின்
- சென்னை
- திமுக எம்.எல்.ஏ.
- ஆஸ்டின்
- ஐரெல் ஆலை
- கிள்ளியூர், கன்னியாகுமரி மாவட்டம்
- கன்னியாகுமரி…
சென்னை: திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூரில் ஐஆர்இஎல் ஆலைக்கு அணுக்கனிம சுரங்க பணிக்கான அனுமதி ஓராண்டு நீட்டிப்பு செய்து தவெக அரசு உத்தரவிட்டுள்ளது. இது கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. குமரி ம ாவட்டத்தை அழிக்க துணிந்து விட்டதா இந்த அரசு.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2024 நவம்பரில் நடந்த தவெக செயற்குழு கூட்டத்தில் “இத்திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது” என இந்த நிறுவனத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிவிட்டு தற்போது ஒன்றிய அரசிற்கு அடி பணிந்து மக்கள் விரோத ஆணையை வழங்கி உள்ளது. இதன் மூலம், இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் பாஜ அரசுக்கும், தவெக அரசுக்கும் உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.
5 ஆண்டுகாலம் திமுக அரசு அனுமதி வழங்காத இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு பயந்து அனுமதி வழங்கி மாவட்டத்தையே அழிக்க துணிந்து விட்டது தவெக அரசு. எனவே, தற்போது வழங்கியுள்ள கால அவகாச நீட்டிப்பு அரசாணையை ரத்து செய்து உடனடியாக ஆணை வெளியிட வேண்டும் என்றும், இல்லையென்றால் இப்பகுதி மக்கள் ஒன்றாகத் திரண்டு தவெக அரசின் மக்கள் விரோத செயலுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என எச்சரிக்கையாக தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
