×

மருத்துவ தலைநகரமாக தமிழகம் திகழ்வதில் மருத்துவர்களின் பங்கு தலையாயது: தேசிய மருத்துவர் தினத்தில் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மக்களின் உயிர்காக்கும் மகத்தான மனிதநேய தொண்டில் அர்ப்பணிப்போடு ஈடுபடும் மருத்துவர்கள் அனைவரையும் தேசிய மருத்துவர் தினத்தில் போற்றுகிறேன்.

இந்தியாவின் சிறப்பான மருத்துவ கட்டமைப்பை தமிழ்நாடு கொண்டிருப்பதிலும், மருத்துவ தலைநகராக திகழ்வதிலும் நம் மருத்துவர்களின் பங்கு தலையாயது. நீட் போன்ற சதிகளால் இதனை தகர்த்திட பார்க்கும் முயற்சிகளை வெற்றிகொள்ள இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,M.K. Stalin ,National Doctors' Day ,Chennai ,DMK ,president ,India ,
× RELATED முன்னாள் எம்பி அன்வர் ராஜாவின்...