×

ஐகோர்ட் பதிவாளர் ஜெனரலாக தீப்தி அறிவுநிதி நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய பதிவாளர் ஜெனலராக மாவட்ட நீதிபதி தீப்தி அறிவுநிதி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலாக பதவி வகித்துவந்த எஸ்.அல்லி நேற்று ஓய்வு பெற்றார்.

இதையடுத்து புதிய பதிவாளர் ஜெனரலாக தீப்தி அறிவுநிதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர். புதிய பதிவாளராக நேற்று பொறுப்பேற்ற தீப்தி அறிவுநிதியை உயர் நீதிமன்ற பல்வேறு பிரிவு பதிவாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Deepthi Arivunidhi ,Registrar General ,High ,Court ,Chennai ,Madras High Court ,S. Alli ,
× RELATED முன்னாள் எம்பி அன்வர் ராஜாவின்...