பரமக்குடி அரசு கல்லூரியில் மகளிர் தின கருத்தரங்கு

பரமக்குடி, மார்ச் 11: பரமக்குடி அரசு கலை கல்லூரியில் மகளிர் தினந்தையொட்டி, மகளிர் தின கருத்தரங்கு நடைபெற்றது. பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில், மகளிர் தின விழாவினையொட்டி மகளிர் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. ஆங்கிலத்துறை தலைவர் ரேணுகாதேவி வரவேற்றார். கல்லூரி முதல்வர் குணசேகரன் தலைமை வகித்தார். துறைத் தலைவர்கள் மணிமாறன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயிர்வேதியியல் துறைத்தலைவர் ஆஷா, கணினி அறிவியல் துறை தலைவர் மும்தாஜ் ஆகியோர் பெண்களின் உரிமை குறித்து பேசினர். பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியை நாகேஸ்வரி, பெண்ணின் பெருமை என்ற தலைைப்பிலும்,  உதவி பேராசிரியை விக்னேஷ்வரி, பெண்களின் தலைமைத்துவம் என்ற தலைப்பில் பேசினார். இதனைத் தொடர்ந்து மாணவிகளுக்கு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ,துறைத் தலைவர்கள் கணேசன், கண்ணன், விஜயகுமார், அறிவழகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். வேதியியல்  துறைத்தலைவர் மோகன கிருஷ்ணவேனி நன்றி கூறினார்.

Related Stories: