திருவிடைமருதூர்: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருவிசநல்லூரில் புனித சூசையப்பர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திருவிசநல்லூரை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறனர். இந்த பள்ளியில் 5 வருடமாக விடுப்பு எடுக்காமல் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களுக்கு முறையான கல்வி கற்பிக்க முடியாத சூழல் இருந்து வருகிறது. மேலும் சில பள்ளிகள் 5 கி.மீ. தொலைவில் இருப்பதால் பெற்றோர், தங்களது குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்க முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
