×

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,475 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: வார விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,475 சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ஜெரோலின் லிஸ்பன் சிங் கூறியுள்ளார்.

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூலை 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 410 பேருந்துகளும், ஜூலை 4-ந் தேதி (சனிக்கிழமை) 290 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஜூலை 3-ந் தேதி வெள்ளிக்கிழமை 55 பேருந்துகளும், ஜூலை 4-ந் தேதி சனிக்கிழமை 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாவரத்திலிருந்து 3 மற்றும் 4-ந் தேதிகளில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் ஜூலை 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 445 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Transport Corporation ,General Manager ,Jeroline Lisbon Singh ,Tiruvannamalai ,Trichy ,Kumbakonam ,Madurai ,
× RELATED சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின்...