×

சின்னதாராபுரம் அருகே அமராவதி ஆற்ரறாங்கரையில் தீ விபத்து

 

அரவக்குறிச்சி, ஜூலை 1: சின்னதாராபுரம் அருகே அமராவதி ஆற்றாங்கரையில் ஏற்பட்ட தீ விபத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தினர். கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே ஒத்தமாதுறை தலையூர் செல்லும் சாலையோரத்தில் உள்ள அமராவதிஆற்றுக் கரையில் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆற்றங்கரையில் உலர்ந்த புல்கள், புதர்கள் மற்றும் குப்பைகள் தீப்பற்றிக் கொண்டு எரிந்ததாக கூறப்படுகிறது. காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவத் தொடங்கியதால் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவானது. இதனைகண்ட பொதுமக்கள் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீர் பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆற்றங்கரையோரத்தில் இருந்த புல்கள், செடிகள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து சின்னதாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கோடை காலங்களில் இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் யாரும் குப்பைகளை தீ வைத்து எரிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர். பின்னர் அமராவதி ஆற்றுக் கரையில் யாரவது கொளுத்தி விட்டார்கள் என்றால் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Amaravathi river bank ,Chinnatharapuram ,Aravakurichi ,Amaravathi river ,Othamathurai Thalaiyur ,Karur district ,
× RELATED கரூர் மூலக்காட்டனூர் பிரிவில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்