×

அமைச்சரை பதவி நீக்கக்கோரி நெல்லையில் திமுக மாணவரணி இன்று ஆர்ப்பாட்டம்

 

நெல்லை, ஜூன் 29: பொது வெளியில் வைத்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ள தவெக அமைச்சரை பதவி நீக்கக்கோரி நெல்லையில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து திமுக நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ஆவடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிரகாம்பெல் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் வழிகாட்டுதலோடு, இளைஞர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் என பொதுமக்கள் ஒன்று கூடும் விளையாட்டு அரங்கில், சமூகப் பொறுப்பற்று, பொதுவெளியில் போதைப்பொருளை பயன்படுத்தியதுடன், அதை காணொலி காட்சியாய் சமூக வலைதளத்தில் வெளியிட்ட, தமிழ்நாடு அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கக்கோரி, இன்று (29ம் தேதி) திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை முன்பு,

திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மேற்கு, மத்திய, கிழக்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாநகர, பகுதி நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், வட்ட, கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், திமுகவினர் அனைவரும் கலந்து கொண்டு வலுவான கண்டனத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்

Tags : DMK ,Nellai ,Minister ,Thaveka ,DMK Nellai West District ,Avadayappan ,Central District… ,
× RELATED கரூர் பகுதியில் கண்களை பதம்பார்க்கும் காற்று