சென்னை: சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.பி.கந்தன் தனது மகனுடன் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் சேர்ந்துள்ளார். அதிமுக சென்னை புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்தவர் கே.பி.கந்தன். இவரது மகன் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளராக உள்ளார்.
சென்னை மாநகராட்சி கவுன்சிலராகவும் உள்ளார். இவர்கள் இருவரும் நேற்று, தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார். இந்தநிலையில், அவர்கள் இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
