×

வெளிநாட்டு பயணிகளுக்கு மீண்டும் ஏர் சுவிதா

புதுடெல்லி: ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் எபோலா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், பொது சுகாதார கண்காணிப்பை மேம்படுத்துவதற்காக, ஏர் சுவிதா 2.0 என்ற மேம்பட்ட இணையதளத்தை ஒன்றிய அரசு மீண்டும் செயல்படுத்தி உள்ளது. ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகமும், டெல்லி விமான நிலையத்தை இயக்கும் டிஐஏஎல் நிறுவனமும் இணைந்து ஏர் சுவிதா 2.0வை மீண்டும் அறிமுகப்படுத்தின.

இதன் மூலம், இந்தியாவுக்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் இந்த இணையதளம் மூலம் தங்களின் சுய விவரங்களை அறிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களது 21 நாள் பயண விவரம், வைரஸ் தொற்று குறித்த விவரம் அல்லது அதன் அறிகுறிகள் உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்க வேண்டும். இந்தியா வருவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக ஏர் சுவிதா சுய அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்யலாம்.

Tags : NEW DELHI ,Africa ,EU government ,Union Ministry of Aviation ,Delhi Air ,
× RELATED தோழி இறந்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை