புதுடெல்லி: பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா வெளியிட்டுள்ள வீடியோவில், ராகுல்காந்தி தனது பதவியின் பெயரான எதிர்க்கட்சி தலைவர் என்பதை சுற்றுலா மற்றும் கொண்டாட்டங்களின் தலைவர் என்று மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர் எப்போதும் அதையே தான் செய்கிறார். கொண்டாட்டங்கள், சுற்றுலா மற்றும் பயணம் என்பதிலேயே இருந்து வருகின்றார்.
அவர் மக்களுக்கு, நாடாளுமன்றத்திற்கு அல்லது நாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதில்லை. அவர் சுற்றுலாவுக்கே முன்னுரிமை அளிக்கிறார். கட்சிக்கு அமைப்பு ரீதியான ஆதரவு தேவைப்படும் முக்கியமான காலகட்டங்களில் அவர் ஓடிவிடுகிறார். ராகுல்காந்தி எப்போதும் விடுமுறை மனநிலையிலேயே இருக்கிறார். ஒருபுறம் பிரதமர் மோடி நாட்டின் மிக நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக ஆகியுள்ளார்.
முதல்வராகவும், பிரதமராகவும், அரசாங்கத் தலைவராகவும் 9000 நாட்களுக்கும் மேலாக பணியாற்றி இருக்கிறார். அவர் ஒரு நாள் கூட விடுப்பு எடுத்தது இல்லை. மறுபுறம் ராகுல்காந்தி விடுமுறையில் மட்டுமே இருப்பதால் அவர் மிக நீண்ட காலம் எதிர்க்கட்சி தலைவராக நீடிக்கும் ஒருவராக மாறக்கூடும்”என்று குறிப்பிட்டுள்ளார்.
