- அமைச்சர்
- அருண்ராஜ்
- சென்னை
- பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு இயக்குநரகம்
- தேனாம்பேட்டை, சென்னை
- அமைச்சர்
- மற்றும் பொது
- அருண் ராஜ்…
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது மருத்துவம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை இயக்குநரக கூட்டரங்கில் மாவட்ட நியமன அலுவலர்கள், உணவு பகுப்பாய்வாளர்கள் மற்றும் அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்துறை அமைச்சர் அருண் ராஜ் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சமீபத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கொடுக்கப்பட்ட உணவு சாப்பிட்டு அங்குள்ளவர்கள் பாதிக்கப்பட்டனர். வருங்காலங்களில் இது போன்று தரமற்ற உணவு கொடுக்க கூடாது. தெருவோர சிற்றுண்டி கடைகளில் விற்பனை செய்யக் கூடியவர்களுக்கு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சுத்தமான மற்றும் தரமான உணவு வழங்குவதற்கு ஹைஜீனிக் புட் என்ற பெயரில் சென்னை, திருச்சி, திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை ஐந்து மாவட்டங்களில் புதிய திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது.
ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் வீல் சேர் தள்ளுவது மற்றும் நோயாளிகளுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட விஷயங்களுக்கு அங்கு பணிபுரியக்கூடிய ஊழியர்கள் பணம் பெறுவதாக புகார் வருகிறது. இதுபோன்று ஏதேனும் நடைபெற்றால் உடனடியாக பொதுமக்கள் 104 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
