×

சட்டப் பேரவையில் ஏளன பேச்சு ‘முதல்வர்’ என்ற பதவியின் மாண்புக்கு உகந்தது அல்ல

சென்னை: சட்ட பேரவையில் ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது ‘முதலமைச்சர்’ என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைப்பதற்கு தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது. உயிரை பணயம் வைத்து இந்த பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களின் நலன்களுக்கு எதிரான இந்நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும்.

தங்க மோதிரம் வழங்குவதற்காக செலவு செய்யும் 755 கோடி ரூபாயை கொண்டு அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப்போல அனைத்து உயரிய வசதிகளையும் கொண்ட ‘பிரசவ வார்டுகளை’ உருவாக்குவதோடு, தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிப்பது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும். எனவே, தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது ‘முதலமைச்சர்’ என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும்.  இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதலமைச்சர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டுமென முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Legislative Assembly ,Chennai ,Thirumavalavan ,Assembly ,Tamil Nadu ,
× RELATED ‘ஆட்சி மாற்றத்துக்கு அவங்கதான்...