×

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுமதிப்பீடு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி பெற்ற மாணவர்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பிக்க கடந்த 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது மாணவர்களின் நலன்கருதி மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க மேலும் ஒருநாள் கூடுதல் காலஅவகாசம் இன்று வரை வழங்கப்படுகிறது.

மாணவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்ட தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,
× RELATED ‘ஆட்சி மாற்றத்துக்கு அவங்கதான்...