×

நெல்லை விற்க முடியாததால் மனஉளைச்சல் ஒடிசாவில் விவசாயி தற்கொலை: குடும்ப தகராறே காரணம் என நிர்வாகம் குற்றச்சாட்டு

புவனேஷ்வர்: ஒடிசாவில் நெல் விற்க முடியாத விரக்தியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவில் மோகன் சரண் மாஜி தலைமையில் பாஜ ஆட்சி செய்து வருகிறது. இங்குள்ள நுவாபடா மாவட்டம் கோம்னா பிளாக் ஜடமுண்டா கிராமத்தை சேர்ந்த விவசாயி நேபால் மாஜி(45). இவர் கடந்த மாதம் 30ம் தேதி 36 குவிண்டால் நெல் விற்பனை செய்வதற்காக அரசு கொள்முதல் நிலையத்தில் டோக்கன் வாங்கியிருந்தார்.

அது ஜூன் 30ம் தேதி வரை செல்லுபடியாகும். ஆனால் 24 நாட்களாகியும் அவரது நெல் கொள்முதல் செய்யப்படாததால் விரக்தியில் இருந்த நேபால் மாஜி, கடந்த 22ம் தேதி விஷம் குடித்துள்ளார். உடனே குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேபால் மாஜியின் மரணத்துக்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கோம்னாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து நுவாபடா மாவட்ட ஆட்சியர் மதுசூதன் தாஷ் கூறுகையில், “நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்பதால் நேபால் மாஜி தற்கொலை செய்து கொண்டார் என்பதில் உண்மையில்லை. அவருக்கு நெல் விற்பனை செய்வதற்கு டோக்கன் தரப்பட்டிருந்தது. அது ஜூன் 30ம் தேதி வரை செல்லுபடியாகும். குடும்ப தகராறு காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார். மேலும், “நேபால் மாஜியின் குடும்பத்துக்கு நிர்வாகம் ஏற்கனவே ரூ.50,000 நிதியுதவி வழங்கி உள்ளது. அத்துடன், டோக்கன் காலாவதியாகும் முன்பே அவரது நெல் கொள்முதல் செய்யப்படும்” என்றார். ம் குழுவை அமைத்துள்ளது.

Tags : Odisha ,Bhubaneswar ,BJP ,Mohan Charan ,Jadamunda ,Komna ,Nuwapata district ,
× RELATED கிரெடிட் கார்டு மோசடிகள் இழந்த பணத்தை...