×

தனியார் கல்லூரிகளை குறைந்த கட்டணம் வசூலிக்க கட்டாயப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான ரூபாய் ஒன்பது லட்சம் லட்சம் ஆண்டு வருமான வரம்பிற்கும், அதேபோன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் வசூலிக்கும் 25 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு கட்டணத்திற்கும் இடையே முரண்பாடு இருப்பதாக தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இது நீதிபதி பி. வி. நாகரத்னா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது பிறப்பித்த உத்தரவில்,‘‘அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அரசு மானியங்கள் வழங்குவதால் அங்கு கட்டணம் குறைவாக உள்ளது. ஆனால் தனியார் கல்லூரிகள் சுயநிதி நிறுவனங்கள் என்பதால், அவையும் அரசு நிறுவனங்களைப் போலக் குறைந்த கட்டணம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட முடியாது.

‘டி.எம்.ஏ பை’ வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில்தீர்ப்பின்படி, சட்டவிரோத கட்டணம் வசூலிக்க மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர, கல்லூரியின் பொதுவான கல்விக் கட்டணத்தை வசூலிப்பதற்கு எந்தவித தடையும் கிடையாது. கல்லூரிகளில் கட்டணம் செலுத்த முடியாத சூழல் இருந்தால், மாணவர்கள் கல்வி உதவித்தொகை அல்லது அரசிடமிருந்து சலுகைகளைப் பெற முயல வேண்டுமே தவிர, கட்டணத்தைக் குறைக்கும் விதமாக கோரிக்கை வைக்க முடியாது. மருத்துவக் கல்வித் துறையில் தனியார் கல்லூரிகளின் பங்களிப்பை நாம் முடக்க முடியாது;

நாட்டிற்கு மருத்துவர்கள் தேவை ஆகும். மேலும் ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்திருந்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், ‘பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு என்பது சேர்க்கைக்கான தகுதி மட்டுமே தவிர, தனியார் கல்லூரிகளில் கட்டணச் சலுகை கோருவதற்கான உரிமை அல்ல’ எனத் தீர்ப்பளித்திருந்தது. தற்போது அந்தத் தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags : Supreme Court ,New Delhi ,
× RELATED கிரெடிட் கார்டு மோசடிகள் இழந்த பணத்தை...