×

சென்னை விமான நிலையத்தில் ரூ. 6 கோடி மதிப்புள்ள உயர் ரக போதைப்பொருள் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ. 6 கோடி மதிப்புள்ள உயர் ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்து சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் பாங்காக்கில் இருந்து ரூ.53 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த பயணி கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் இருந்து தனியார் பயணிகள் விமானம் நள்ளிரவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. இதில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை செய்தபோது கேரள மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் சுற்றுலா பயணியாக தாய்லாந்து சென்று திரும்பியிருந்தார். சந்தேகத்தின் பயணியிடம் சோதனை செய்தபோது உணவுப்பொருள் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்ட 9 பார்சல்கள் இருந்தன.

அதில் உயர் ரக போதைப்பொருள் மற்றும் 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே நேற்று காலை சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 414 கிராம் தங்கப்பசை கண்டுபிடிக்கப்பட்டது.

தங்கப்பசையை கொண்டு வந்த நபரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்த நாட்களில் ஏற்பட்ட இத்தகைய சம்பவங்கள் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai Airport ,Chennai ,Bangkok ,
× RELATED கல்பாக்கம் அருகே 14 வயது சிறுமியைக்...