- காவிரி நீர் மேலாண்மை ஆணையம்
- தில்லி
- எஸ்.கே. ஹெல்டர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கர்நாடக
- கேரளா
- புதுச்சேரி
- தமிழ்நாடு நீர் வளத் துறை…
டெல்லி: டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 52 வது கூட்டம் தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹெல்தர் தலைமையில் டெல்லியில் கூட்டம் கூடியிருக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம், புதுச்சேரியை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக நீர்வளத் துறை செயலாளர் சத்யபிரதா சாகு, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், பாசனத்துக்கு தேவையான ஜூன் மாத நீர் பங்கீட்டை உடனடியாக திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட தமிழகம் வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜூன் மாத பங்கீட்டு நீரை கர்நாடகாக திறக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. மேகதாது அணை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆலோனை நடைபெற்று வருகிறது.
