×

ஈரோடு மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 60 வார்டுகளை சேர்ந்த நான்கு மண்டலங்களுக்கு உட்பட 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் பங்களிப்பு முறையில் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் விடுவதற்கான ஏற்படும் செய்யப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடு முழுவது தூய்மைப் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தூய்மைப் பணிகளை தனியார் மயத்தை தடுத்து நிறுத்த கோரி ஈரோட்டில் தூய்மைப் பணியாளர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்குள் திரண்ட தூய்மைப் பணியாளர்கள் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

தூய்மைப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கும் அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பணியை அரசு மூலமாகவே தொடர வேண்டும் என வலியுறுத்துகின்றனர். 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாநகராட்சியில் இன்று காலை செய்யவேண்டிய தூய்மை பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் தற்பொழுது பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Erode Corporation ,Erode ,
× RELATED மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு கைகளை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்காது