×

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு கைகளை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்காது

சென்னை: மேகதாது திட்டத்தை முறியடிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் என்.ஆனந்த் கூறி இருக்கிறார். மேகதாது விவகாரத்தில் கைகளை கட்டி கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது. மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அமைச்சர் என்.ஆனந்த் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆனந்த், காவிரி நதிநீர் விவகாரத்தில் நமது உரிமை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் தமிழக அரசு எந்தவித சமரசமும் செய்யாது என்று திட்டவட்டமாக கூறினார்.

அதே போல மேகதாது அணையை செயல்படுத்த அனுமதிக்க கூடாது என பிரதமரிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தி உள்ளார். மேலும் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் பேசி இருக்கிறார். மேகதாதுவில் அணை கட்டுவதை முறியடிப்பதன் மூலம் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அரசு உறுதியுடன் செயல்படும். மேகதாது தொடர்பாக நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர் ஆணையம் மட்டுமே முந்தைய தீர்ப்புகளின் இணக்கத்தை தீர்மானிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி விரிவான சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது என்றும் அமைச்சர் ஆனந்த் குறிப்பிட்டார்.

Tags : Tamil Nadu government ,Megathu ,Chennai ,Minister ,N. Anand ,Tamil Nadu ,
× RELATED அமோனியா கசிவு விவகாரம்: சட்ட விதிகளை...