- தாய்மார்கள் சங்கம்
- திருத்துறைப்பூண்டி
- தாய்மார்கள்
- சங்கம்
- இந்திய தாய்மார்கள் தேசிய கூட்டமைப்பின் ஒன்றியக் குழு
- திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்
- கவிதா.…
*மாதர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
திருத்துறைப்பூண்டி : பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மாதர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் ஒன்றியக்குழு கூட்டம் கவிதா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜவகர், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு வழி காட்டினர். அறிக்கையினை ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வி ராஜா முன் வைத்தார். 2026ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் பதிவு குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்திகுற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை உடனடியாக வழங்க வேண்டும்.
பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 25ம்தேதி காலை 10 மணி அளவில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற உள்ளது. அந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத்தில் இருந்து இரண்டு வாகனம் செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டினை உடனடியாக நிறைவேற்ற கோரி டெல்லியில் நடைபெற இருக்கின்ற தர்ணா போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து மாதர் சங்க மாவட்ட தலைவர், செயலாளர் இருவரும் பங்கு பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
