×

தெருநாய்களை அப்புறப்படுத்துவது குறித்து இருமாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கல்வி, பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்துவது குறித்து அறிக்கை தர தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி நிலையங்களில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

Tags : High Court ,Chennai ,Tamil Nadu ,Puducherry governments ,
× RELATED சதுரகிரியில் தினம்தோறும் மலையேற இன்று முதல் தடை விதிப்பு