தமிழகத்தில் உள்ள 46 கோயில்களின் உபரி நிதியிலிருந்து திருமண மண்டபம், வணிக வளாகம் கட்டும் பணிகள் ரத்து: அரசாணை வெளியீடு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அரசாணை:
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. அதன் அடிப்படையில் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்ட பணிகள் தொடங்கப்படாத நிலையில் அந்த அறிவிப்புகளை சட்டமன்ற அறிவிப்பிலிருந்து நீக்கம் செய்வதற்கு, கோயில்களிடமிருந்து முன்மொழிவுகள் வரப்பெற்றது. எனவே, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் கோயில் அறங்காவலர் குழு மற்றும் தக்கார் தீர்மானத்தின்படியும், இணை ஆணையர்களின் முன்மொழிவுகளை ஏற்று கோயில் உபரிநிதியின் மூலம் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் பணிகளை சட்டமன்ற அறிவிப்பிலிருந்து நீக்கம் செய்யுமாறு அறநிலையத்துறை ஆணையர் அரசை கேட்டு கொண்டுள்ளார். இதை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, பழநி தண்டாயுதபாணி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், சென்னை அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோயில், சென்னை மேற்கு மாம்பலம் பாஷ்யகார ஆதிசென்ன கேசவப்பெருமாள் கோயில் உள்ளிட்ட 46 கோயில்களின் உபரிநிதியின் மூலம் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் பணிகளை சட்டமன்ற அறிவிப்பிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: