×

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.3.58 கோடி காணிக்கை செலுத்தினர். பக்தர்களுக்கு 3.98 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 2.75 லட்சம் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

சனிக்கிழமையான இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பி சிலா தோரணம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

Tags : Tirupati ,Lord Shiva ,Tirumala ,Ezhumalaiyan ,Temple ,Anna Prasad ,
× RELATED 37 லட்சம் பக்தர்கள் பயணித்த நிலையில்...