×

லாட்டரி விற்றவர் கைது

திருப்பூர், மார்ச் 9: திருப்பூர், மத்திய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மத்திய போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கருவம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டம் அருகில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரனை நடத்தினர்.  இதில் அவர் அந்த பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ. 2500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED உடுமலை. தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்